கொங்கு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர்கள் பேரவை
By கொங்கு வேந்தன் - Thursday, January 13, 2011
கொங்கு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர்கள் பேரவை ( அரசியல் சாரா சேவை சங்கம் ) - அறிமுகக்கூட்டம்
நாள்: 02.01.2011 ஞாயற்றுக்கிழமை
இடம்: அரச்சலூர் அறச்சாலை அம்மன் கோவில்
நேரம்: காலை 10 மணி
அன்புடையீர்...,
வணக்கம்., வேட்டுவ கவுண்டர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.., நமது சமுக இளைஞர்கள் சிலரின் ( திரு.தாமோதரன் கவுண்டர், திரு.பெரியசாமி கவுண்டர், திரு.சதீஷ் கவுண்டர் , திரு.சரவணன் கவுண்டர் ) ஆகியோரின் ஒருங்கிணைக்கும் முயற்சியின் பலனாய் 02.01.2011 ஞாயற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு நமது சொந்தங்கள் அரச்சலூர் அறச்சாலை அம்மன் கோவிலில் கூடினர். ஒருவரை ஒருவர்அறிமுகப்படுத்தியதன் பின்னர் 'சங்கக்கோட்பாடுகள்' கொண்ட பத்திரிக்கை அம்மனிடம் வைத்து பூஜிக்கப்பட்டு கூட்டம் தெய்வீகமாக தொடங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை மற்றும் கோபி பகுதியில் இருந்து வந்த சுமார் இருபது இளைஞர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் நமது வேட்டுவ கவுண்டர் சமூகத்தை முன்னேற்றுவது குறித்து அவரவர் கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இதன் விளைவாய் வேலைவாய்ப்பு, திருமணம், கல்வித்தரத்தை உயர்த்துதல், பிரதானனமாக தலையூர் காலி கோவிலை ஒரு வரலாற்று சிறப்பு மிகுந்த ஒரு கோவிலாய் கட்டுதல் என பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. கொட்டாரத்தோட்டதில் இருந்து வந்த நமது சுந்தரமூர்த்தி அனைவரையும் ஒ.எஸ்.டி அம்மா அவர்களிடம் அழைத்து சென்றார். எங்கள் எண்ணம் குறித்து அம்மா அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அவர்கள் தனது கருத்துக்களையும் அனுபவங்களையும் எங்களுக்கு கூறினார். பிறகு துத்திக்குலம் பாலு என்பவரை அறிமுகப்படுத்திவைதார்கள். அவர் சங்கம் ஆரம்பிப்பது, அதை ரிஜிஸ்டர் செய்வது மற்றும் சேவை செய்வது குறித்து சட்ட ரீதியான அறிவுரைகளை வழங்கினார். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அறிமுகக்கூட்டமே சிறப்பாய் அமைந்தது குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இறுதியாய் கூட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. நிறைவாய் அடுத்த கூட்டம் 17.01.11 அன்று வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதில் குறைந்தது நூறு சொந்தங்களை கலந்து கொள்ள வைப்பது என்ற சூளுடன் பெருமைக்குரிய வேட்டுவ கவுண்டர்கள் நன்றி கூறி விடைபெற்றனர்.
-- ---
With Regards,
Kongu Vettuva Gounder Youth Federation
Follow our blog on Twitter, become a fan on Facebook. Stay updated via RSS