By கொங்கு வேந்தன் - Wednesday, January 19, 2011
கொங்கு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் பேரவை கூட்டம்.
நாள் : 17.01. 2011
இடம் : பட்டையகாளிபாளையம் காலஹஸ்தீஸ்வரர் கோவில்மண்டபம்.
கொங்கு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் பேரவை கூட்டம் கோபி அருகே
உள்ள பட்டையகாளிபாளையம் காலஹஸ்தீஸ்வரர் கோவில்மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காலஹஸ்தீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து விட்டு, கண்ணப்பநாயனார் குருபூசை வழிபாடும் நடத்திவிட்டு கூட்டம் இனிதே துவங்கியது. கூட்டத்திற்கு கொங்கு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு.சத்தீஷ்கவுண்டர், திரு.பெரியசாமிக்கவுண்டர், திரு.சரவணன்கவுண்டர் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய வேட்டுவக்கவுண்டர் சங்கத்தின் சார்பாக திரு.மோகன்குமார்கவுண்டர் கலந்து கொண்டுகூட்டத்திற்கு முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு கரூர் , நாமக்கல், திருச்செங்கோடு, கோபி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகியபகுதிகளில் இருந்து வந்து நமது சமுதாய மக்கள் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பித்தார்கள். கூட்டத்தில் தமிழ்நாடு வேட்டுவக்கவுண்டர் சங்கத்தின் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.ஜெயராமன்கவுண்டர் கலந்து கொண்டு நாம் எதிர் காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். மற்றும் இளைஞர் பேரவைபதிவு செய்வதற்கு தாம் உதவுவதாகவும் கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தலா 50 பேரைஉறுப்பினர்களாக சேர்ப்பது.
2. ஏழை மாணவர்களுக்கு முடிந்த அளவு கல்வி பயில உதவுவது.
3. ஆபத்து காலங்களில் நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இரத்தம்
தேவைப்படும்போது இரத்ததானம் செய்வது.
4. நமது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில்
பொருட்களை வாங்குவது.
5. வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிவித்துஅனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல். ஆகிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .
அடுத்த கூட்டம் கரூர் அருகில் உள்ள தலையூர் பிரம்மா காளிகோவிலில்
நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
என்றும் அன்புடன்,
கொங்கு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் பேரவை

Follow our blog on Twitter, become a fan on Facebook. Stay updated via RSS