-
Do you need help?
ஆதாரங்கள்
பூர்வீகம்
வணங்கி வருவதும் சிந்திக்கத்தக்கது.எட்கர் தர்ஸ்டன் அவர்களும் முத்தரையர்,வேட்டுவர்,வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பதும் இங்கே நினைவு கூர்தற்குரியது.
இவர்களுள் 1.வேட்டுவன், 2.வேடன், 3.காவிலவன், 4.மாவிலவன், 5.பூவிலவன் எனும் ஐந்து பெரும் பிரிவுகள் இருந்தன.பிற்காலத்தில் இவர்கள் கவுண்டர் எனும் பட்டத்தைப் புனைந்து கொண்டனர்.
சங்க காலம்
முன்னேற்றம்
வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டனர்.இதுவே வேட்டுவர் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி எனலாம்.இவர்களை வெளாளர்(வேளாளர்)என சோழர்காலக் கல்வெட்டுகள் கூறுகின்றனர்.வரலாற்றுத் தொடக்க காலத்தில் வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட இவர்கள், இடைக்காலத்தில் வேளாண்மையில் நாட்டம் கொள்ளும் அளவிற்கு உயர்ந்தனர்.
சோழர் காலம்
என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.
சமுதாய வாழ்வில் வேட்டுவர்-வெள்ளாளர் நிலை
வேட்டவூர்,பூலுவ ஊர்,பூலுவ நாடு
எனும் அமைப்புக்களைக் கொண்டிருந்தனர். அடுத்து பூலுவ ஊரார் இணைந்து பூலுவ நாடு எனும் நாட்டர் அவையையும் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக அன்னூரிலிருந்து பூலுவ ஊர், சேவூரிலிருந்து பூலுவ ஊர், திங்களூரில் இருந்த வேட்டவூர், விசயமங்கலத்தில் செயல்பட்டு வந்த வேட்டவூரைச் சுட்டலாம்.
"ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும்......
சோழர்க்குச் செல்லா நின்ற யாண்டு
........ஊராளி வேட்டுவன் அழகன்
காளி அவன் இதில் பட்டான்."
சோழருக்குப் பின்னர்
வேட்டுவ வீரர்களைப் பெருமளவில், தமது படையில் சேர்த்துக்கொண்டனர். கொங்கில் மேலாண்மையைச் செலுத்திய சுந்தர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில்(1252 – 1271) அந்தியூரன் எனும் வேட்டுவத் தலைவன், திருச்செங்கோட்டுப் போரில் பாண்டியரது
பக்கம் நின்று போரிட்டு மாண்டான் என்பதனைச் சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டால் அறிகிறோம்.
இதோ அக்கல்வெட்டு.
"ஸ்வஸ்தி ஸ்ரீ சுந்தரபாண்டியா
தேவற்கு யாண்டு 6 – வது
வடகரை நாட்டு உரகடங்கச்சதி
கண்ணையன் வேட்டுவரில்
அந்தியூரன்"
பட்டக்காரர்கள்
விசயநகர வேந்தரது ஆதிக்கம் கொங்கு நாட்டில் பரவிய போது, வேட்டுவரும் வேளாளரும் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர். வேட்டு பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர், தென்னிலை, காக்காவாடிப்
பட்டக்காரர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இதே காலக்கட்டத்தில் வேட்டுவத் தலைவர் சிலர் அரண்மையாளர்களாகவும் திகழ்ந்தனர்.
இவர்களுள் கொடையூர் சீத்தப்பட்டி, நிமந்தப்பட்டி, நவமரத்துபட்டி, நல்லகுமரன் பட்டி, இழுப்பக்கிணத்துப்பட்டி, அரண்மனையாளர்கள்
புகழுடன் விளங்கினர். வேட்டுவத் தலைவருள் பலர் காணியாளர்களாகவும் ஊராளிகளாகவும் திகழ்ந்தனர். இதனைப் பல கல்வெட்டுக்கள்
உறுதி செய்கின்றன.
மேற்கூறியவற்றான் வேட்டைத் தொழிலை முதன்மையாகக் கொண்டிருந்த வேட்டுவர், நாளடைவில் படைவீரர்களாகவும்படைத்
தலைவர்களாகவும், காணியாளர்களாகவும், ஊராளிககளாகவும், திகழ்ந்தமை அறியப்படுகின்றன. சிலர் காடுகளை அழித்து கழனிகளாக
மாற்றி வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டனர் இவர்கள் பழங்கொங்கு நாடு முழுவதும் வாழ்ந்து வந்த போதிலும் வடகொங்கில் அதிக
எண்ணிக்கையில் இருந்தனர். காவிரி, நொய்யல், அமராவதிப்படுகைகளில் அவர்களது குடியிருப்புகள் மிகுதியாகவே இருந்தன.
வேட்டுவரின் குலப்பிரிவுகள்
வேர்வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை எண்ண முடியாது – என்பது பழமொழி. ஆம் வேட்டுவரிடையே எண்ணிறந்த
குலப்பிரிவுகள் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறிகிறோம். இது காறும் ஏறத்தாழ 203 வேட்டுவரது
குலப்பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வேட்டுவரின் வீரப்பண்பு
கொங்கு நாட்டில் காணப் பெறுகின்ற நடுகற்கள், புலிக்குத்திக் கற்கள் ஆகியன வேட்டுவரின் வீரத்தையும், அஞ்சாமையும் பறைசாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக கரையகுல சொக்கனின் பெருவீரத்தைப் போற்றிப் புகழும் பழமங்கலம்(பெரியார் மாட்டம்)
நடுகல் கல்வெட்டைச் சுட்டலாம். அக்கல்வெட்டைக் கீழே காண்போம்.
"வாய்த்த புகழ் மங்கலத்து வந்தெதிர்த்த மாற்றலரைச்
சாய்த்த மருள் வென்ற சயம்பெருகச் சீர்த்த புகழ்
நிக்குவனம் கற்பொறிக்கப்பட்டான் கரைய குலச்
சொக்கனேந்தலேவுலகிற் காண்.
இக்கற்பொறி ரகூஷிப்பான் பாதம்என் தலை மேலே"
"வெட்ட வெட்டத் தலைக்குது வேட்டுவர் படை எனும்" முதுமொழியும் வேட்டுவரின் வீரத்திற்கோர் இலக்கியமாகத் திகழ்கிறது.
புலியைக் குத்திக் கொல்லுவதில் இவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இதன் நினைவாகக் கொங்கு யநாட்டில் பல புலிக்குத்திக்கற்கள்
காணப்படுகின்றன. புலியைக் குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமதுபெயருடன் சூட்டிக்கொண்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிகுத்திதேவன் எனக் குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம்.
வேட்டிவரின் பொதுப்பணி
கால்வாய் வெட்டுதல், அணைகட்டுதல், குளம் வெட்டுதல், நீர்பாசனத்தைப் பெருக்குதல், ஊரில் புகுந்து மக்களுக்கும்,மாக்களுக்கும்,
தீங்கு விளைவிக்கும் கொடிய மிருகங்களைக் கொல்லுதல் – முதலான பொதுப்பணிகளிலும் வேட்டுவர் ஈடுபட்டிருந்தனர் என்பதைக்
கல்வெட்டுச் சான்றுகளால் அறியலாம். வேளாண்மையின் உயிர்நாடியாக, அச்சாணியாக விளங்கும் நீர்பாசனத்தைப் பெருக்குவதில்
வேட்டுவத் தலைவர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
சேலம் மாவட்டம் வடகரை ஆற்றூரில் வாழ்ந்து வந்த அல்லாளன் இம்முடித்திருமலை இளையான், காவிரியிலிருந்து ராஜ வாய்க்கால்
எனும் கால்வாயை வெட்டினான், ஜேடர் பாளையத்திலிருந்து வேலூர் வழியாகப் பாலப்பட்டி வரை சென்று ஒடுவந்தூரில் முடிவடையும்
இது காவிரியில் வெட்டப்பட்ட முதல் கால்வாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பூச்சந்தை வேட்டுவன் பெரிய பெருமாள் முத்தாண்டன் என்பான், வடபரிசார நாட்டு நவிரையான கப்பலன் கிடாரன் எனும் ஊரில்
தாமரைக்குளம் ஒன்று வெட்டினான். பெரிய விளங்கி ஊராளியான சுண்டை வேட்டுவன் எழுகரை நாட்டில் அக்கசாலைக் கங்கை
எனும் பெயரில் குளம் ஒன்று வெட்டினான். இதனைக் கீழ்காணும் கல்வெட்டு விளக்குகிறது.
"ஸ்வஸ்தி ஸ்ரீ எழுகரை நாட்டு அக்கைசாலை
கங்கை என்று பேரிட்டு இக்
குளம் அட்டினேன் பெரிய விலங்கி
ஊராளியாகிய சுண்டை வேட்டுவன்
சிலம்பன் சிறியன் ஆன எழுக
ரை நாட்டு அக்கை சாலைகள் மாத்த
ஆராத பிள்ளையேன் பேர் மலை"
(சேலம் மாவட்டம், மூக்குத்தி பாளையம் அருகில் மோழப்பறையில் உள்ளது)
இதனைப் போன்று வேட்டுவர் நீர்பாசனத்தைப் பெருக்க பல பணிகளைச் செய்துள்ளனர் என்பது கல் வெட்டுகளால் புலனாகிறது.
இறைப்பணி
பொதுப்பணியில் பேரார்வம் காட்டிய வேட்டுவர் திருக்கோயில்களைக் கட்டுவதிலும், அதில் புதிய கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதிலும், இறைவனது திருவுருவங்களை எழுந்தருளச் செய்வதிலும், கோயில் வழிபாடு சிறப்புற நடைபெற நிலக்கொடைகள்
விடுவதிலும் ஆர்வம் காட்டினர். இதனைக் கல்வெட்டு ஆதாரங்களால் அறியலாம். எடுத்துக்கட்டாகப் பெரியார் மாவட்டம் அறச்சலூர்க்
கல்வெட்டை சுட்டாலாம். இதோ அக்கல்வெட்டு.
"ஸ்வஸ்திஸ்ரீ ஒய்சள புஜபல வீரவல்லாள
தேவர்பிருத்வி ராஜ்யம் பண்ணி ஆருளா
நின்ற யுவ சம்வத்சரத்துத் தை
மாதத் தொருநாள் மேல்கரைப்
பூந்துறை நாட்டு அறச்சலூரில்
கரைய வேட்டுவரில் செய்யான்
பல்லவரையனேன் இவ்வூர் புற்றிடங்
கொண்டநாயனார் கோயிலில்
திருக்கட்டளையில் திருநிலைக் காலும்
படியும் செய்வித்தேன்."
(புலவர் செ.இராசு அவர்கள் படித்தது)
வெங்கட்சி வேட்டுவன் ஒருவன் சங்ககிரி வட்டத்திலுள்ள மருதூரில் காளியம்மன் கோயிலைக் கட்டினான். அதியமான் நடுவில் நங்கன்
என்பான் பருத்திபள்ளிச் சிவன் கோயிலைப் புதுப்பித்தான். கல்லை வேட்டுவனான குறுஞ் சொக்கன் உலகடம் உலகேஸ்வரர் கோயிலில்
அர்த்த மண்டபத்தையும், பின்னப்படுத்தப்பட்ட இத் திருக்கோயிலைப் புதுப்பித்துக் குடமுழுக்கும் செய்வித்தான்.(கி.பி.1643)
வேட்டுவக்கவுண்டர்களின் குலப்பிரிவுகள்
அண்டை வேட்டுவர் அரிச்சந்திர வேட்டுவர்
அந்தி வேட்டுவர் அக்னி வேட்டுவர்
அந்துவ வேட்டுவர் அன்னல் மீளவேட்டுவர்
அல்லாள வேட்டுவர் ஆப்ப வேட்டுவர்
அமர வேட்டுவர் இரும்புலி (இரும்புளை) வேட்டுவர்
ஆமை வேட்டுவர் இந்திர வேட்டுவர்
இலங்கை வேட்டுவர் உண்ணாடி வேட்டுவர்
ஈங்குறு வேட்டுவர் உதிர வேட்டுவர்
உண்ணாடி வேட்டுவர் உம்பி வேட்டுவர்
உத்திர வேட்டுவர் உயிர் வேட்டுவர்
உயர வேட்டுவர் உறுமுக வேட்டுவர்
உரிமைப் படை வேட்டுவர் கஞ்சி வேட்டுவர்
ஊராளி வேட்டுவர் கதிரிகளனை வேட்டுவர்
கதிப்ப வேட்டுவர் கரட்டு வேட்டுவர்
கதுகாலி வேட்டுவர் கருவளி வேட்டுவர்
கரடி வேட்டுவர் கரும் புனித வேட்டுவர்
கரிப்படை வேட்டுவர் கரைய வேட்டுவர்
கருவண்ட வேட்டுவர் கவுண்டி வேட்டுவர்
களங்க வேட்டுவர் கள்ளை வேட்டுவர்
கற்பூர வேட்டுவர் கன்னி வேட்டுவர்
காக்காவாடி வேட்டுவர் காச வேட்டுவர்
காட்டு வேட்டுவர் காரி வேட்டுவர்
காவலர் காவலன் குறும்பில்லர்
காவலன் மன்றாடி காவலன் மேலைக் கறையர்
காவலன் வளவர் காவலர் வெண்கொற்றர்
காடை வேட்டுவர் காரிய வேட்டுவர்
காழைய வேட்டுவர் கிழங்க வேட்டுவர்
கீரந்தை வேட்டுவர் கீரை வேட்டுவர்
குடுமி வேட்டுவர் குருக்கல் வேட்டுவர்
குளுவ வேட்டுவர் குறுங்காடை வேட்டுவர்
குறும்ப வேட்டுவர் குறுண்டி வேட்டுவர்
குன்னாடி வேட்டுவர் கூச்சந்தை வேட்டுவர்
கூத்தாடி வேட்டுவர் கூரம்ப வேட்டுவர்
கொடுகத்தாளி வேட்டுவர் கொட்டாப் புலி வேட்டுவர்
கொடுமுடி வேட்டுவர் கோமுக வேட்டுவர்
கொல்லி வேட்டுவர் கொன்றை வேட்டுவர்
கோதண்ட வேட்டுவர் கோமாளி வேட்டுவர்
கௌதாரி வேட்டுவர் சரக்கு வேட்டுவர்
சர்க்கரை வேட்டுவர் சாக்களி வேட்டுவர்
சாதி வேட்டுவர் சாந்தப்படை வேட்டுவர்
சித்ச வேட்டுவர் சித்த வேட்டுவர்
சிலை வேட்டுவர் சிறத்தலை வேட்டுவர்
சுண்ட வேட்டுவர் சுரண்டை வேட்டுவர்
சுல்லி வேட்டுவர் சுறண் வேட்டுவர்
செங்கண் வேட்டுவர் செம்ப வேட்டுவர்
சேதாரி வேட்டுவர் சேர வேட்டுவர்
சொட்டை வேட்டுவர் சொர்ண வேட்டுவர்
தழும்ப வேட்டுவர் தரைய கரைய
தாலி வேட்டுவர் திட்ட வேட்டுவர்
தும்பை வேட்டுவர் துர்க்கை வேட்டுவர்
பள்ள வேட்டுவர் பம்பை வேட்டுவர்
பரந்தை வேட்டுவர் பருத்தி வேட்டுவர்
பௌத்ரம் வேட்டுவர் மணிய வேட்டுவர்
மலைய வேட்டுவர் மந்திர வேட்டுவர்
மயில வேட்டுவர் மாடந்தை வேட்டுவர்
மாச்சாடி வேட்டுவர் மாந்தப் படை வேட்டுவர்
மான வேட்டுவர் முரட்டு வேட்டுவர்
முகிழ வேட்டுவர் மும்முடி வேட்டுவர்
முழக்க வேட்டுவர் முளை வேட்டுவர்
முன்னை வேட்டுவர் மூளை வேட்டுவர்
மூல வேட்டுவர் மொயர வேட்டுவர்
மோளை வேட்டுவர் மோக்காளி வேட்டுவர்
மின்ன வேட்டுவர் பலகை வேட்டுவர்
பலத வேட்டுவர் பறவை வேட்டுவர்
பரப்பள வேட்டுவர் பத்திர வேட்டுவர்
பாண்டிய வேட்டுவர் பாசறை வேட்டுவர்
பால வேட்டுவர் பாரி வேட்டுவர்
பிரம்ப வேட்டுவர் பீச்ச வேட்டுவர்
புன்னாடி வேட்டுவர் புதர வேட்டுவர்
புன்ன வேட்டுவர் புட்ப வேட்டுவர்
புலி வேட்டுவர் புள்ளை வேட்டுவர்
பூச்சந்தை வேட்டுவர் பூவாணிய வேட்டுவர்
பூலுவன் உத்தரர் பூலுவன் குப்பகள்
பூலுவன் செய்யகள் பூலுவன் பெரும்பற்றார்
பூலுவன் மயிலர் பூலுவ வேட்டுவர்
பூழை வேட்டுவர் பெயர வேட்டுவர்
பெருமாள் வேட்டுவர் பேரீஞ்சை வேட்டுவர்
பொன்ன வேட்டுவர் மினுக்க வேட்டுவர்
மீள வேட்டுவர் மின்ன வேட்டுவர்
ராசி வேட்டுவர் வராக வேட்டுவர்
வடுக வேட்டுவர் வன்னி வேட்டுவர்
வாகை வேட்டுவர் விசயமங்கல வேட்டுவர்
விளக்கு வேட்டுவர் வில்லி வேட்டுவர்
விறகு வேட்டுவர் வினைய வேட்டுவர்
வீர வேட்டுவர் வெங்கச்சி வேட்டுவர்
வெள்ளை வேட்டுவர் வெற்ப வேட்டுவர்
வேல் வேட்டுவர் வேந்தை வேட்டுவர்
வேதகிரி வேட்டுவர் ஜெய வேட்டுவர்
ஜெயவேந்த வேட்டுவர்
கரூவூர்க் கல்வெட்டில் பூவாணிய – திருவெஞ்சமாக் கூடல் கல்வெட்டில் கரடி, உயர – வெங்கம்பூர் கல்வெட்டில் புல்லி – குட்லாம் பாறைக்(நாமக்கல் வட்டம் வாழவந்தி அருகில்) கல்வெட்டில் இரும்புளை – பூலாம்பட்டி சோழப்பாறைக்(சங்ககிரி வட்டம்) கல்வெட்டில் பால – மதுரகாளியம்மன் ஓடையருகே உள்ள ஏரிக்கல்வெட்டில் (சங்ககிரி வட்டம்) வெங்கச்சி –மோழப்பாறைக் கல்வெட்டில் சுண்டை -
ஏமூர் மாரியம்மன் கோயில்(நாமக்கல் வட்டம்) கல்வெட்டில் கிழங்க பழமங்கலம் (பெரியார் மாவட்டம்) கல்வெட்டில் கரைய. அந்தியூர்க்
(பவானி வட்டம்) கல்வெட்டில் பாசறை – கிடாரம்(கோபி வட்டம்) கல்வெட்டில் பூச்சந்தை – முதலான வேட்டுவ குலப்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வேட்டுவர் புகழ்பாடும் குருகுல காவியம்,
பஞ்சவர்ண ராஜ காவியம் ஆகியவை வேட்டுவரின் பல்வேறு குலங்களைச் சுட்டுகின்றன.
வரலாற்றுச் செம்மல் பேராசிரியர் திரு.ம.இராசசேகரதங்கமணி
நன்றியுரை
இக்கட்டுரையை இணைய தளத்தில் பிரசுரிப்பதற்கு அனுமதி அளித்த வரலாற்றுச் செம்மல் பேராசிரியர் திரு.ம.இராசசேகர தங்கமணி
அவர்களுக்கும், இக்கட்டுரை ஆவணத்தை வழங்கிய கொங்கு மண்டல வரலாற்று ஆய்வாளர் திரு.பூலுவராஜன் அவர்களுக்கும், நமது
சமூக வரலாற்று கட்டுரைகளை இணைய தளத்தில் பதிப்பித்து எனக்கு ஊக்கம் அளித்து வரும் திரு.எம்.எஸ்.மோகன்குமாரவேல் (பெங்களூர்) அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
ஆர்.முத்துசாமி(9940701039)
புஞ்சை புளியம்பட்டி
வீரப்பூர் போர்களத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும்,போரின் முடிவையும் படைவீரர்களாகப் பணியாற்றிய முத்தரைய
வீரர்களே அறிவார்கள்.அவர்கள் தெரிந்து கண்ட நிகழ்ச்சிதான் இன்றைய படுகளம் போரில் அனைவரும் தற்கொலை புரிந்து மாண்டனர்.
அந்த இடம் தான் படுகளம் என்று அழைக்கப்படுகிறது.பொன்னர் ,சங்கர் ,சாம்பன் ஆகியோர் இறந்த இடத்தில் நடுகள் வைத்து முத்தரைய
வீரர் குடும்பங்கள் ஆண்டுக்கு ஒரு முறை வழிபாடு நடத்தி வந்தனர்.
வீரப்பூர்ப் போர் நடந்து 200 ஆண்டுகள் ஒடிவிட்டன. முத்தரைய வீரர்கள் கூறியதில் இருந்து எத்தனையோ கற்பனைகள் உடன் சேர்த்து
கதைப்பாட்டு எழுதிவிட்டார்கள். இதில் வரும் நிகழ்ச்சிகள் 90% விழுக்காடு வரலாற்று சம்பந்தம் இல்லாதவை.
தலையூர்ப் படைகள் வளநாடு நோக்கி வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட வளநாட்டு படை தலையூர்ப் படையை வளநாட்டிற்க்குள் புகவிடாமல் வீரப்பூர் காட்டில் தடுத்து நிறுத்தி போர்தொடுத்தது. போரின் முடிவில் வளநாட்டு படை முழுவதும்
முறியடிக்கப்பட்டது.படுகளம் பகுதியில் மேடான பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டு முன்னரே அழிந்து போன படை போக
மீதியிருந்த படை வீரர்களுடன் பொன்னர் சங்கர் சுற்றி வளைக்கப்படவே தப்பி ஒடமுடியாத இட அமைப்பும், படைக்குறைவும் ஏற்படவே எதிரிகள் கையில் சிக்காமல் இருக்க மூவரும் வாளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது தான் உண்மை. வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தும் இதுவே.
படுகளத்தில் இருந்து நேர் கோட்டில் பார்தாலே 20 கி.மீட்டர் அப்பால் வரும் படையின் தூசி, வேல்கள் மின்னுவதை வைத்து படைகள்
வரும் திசை , தொலைவு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட்டு விடலாம். இதை அடிப்படையாக வைத்துத்தான் வளநாட்டுப்படைத்
தலைமை இந்த மேடான பகுதியில் படையை நிறுத்திக்கொண்டு தலையூர் படைக்காக காத்திருந்தது. தலையூர்ப்படைக்கும், வளநாட்டுப்
படை நின்ற இன்றைய கூவனாம் பள்ளத்திற்கு அருகே போர் மூண்டது.இந்த போர் பற்றி எந்த குறிப்புக்களோ, கல்வெட்டோ,செப்பேடு
பட்டயமோ இல்லை. எந்த ஆவணங்களும் இல்லை.
இந்த போர் நடந்து முடிந்து ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு பின்னர் எதை வைத்து எழுதியிருக்க முடியும்.? கள்ளழகர் அம்மானையும்,
பிச்சனும் இதை பாரதபோர் அளவிற்கு புனைந்து எழுதிவிட்டார்கள். இதில் சிறிதும் உண்மையில்லை.
போரின் முடிவைத்தெரிந்து கொண்டு பொன்னர்,சங்கர் மனைவியர் தீயிட்டு இறந்து விடுகிறார்கள்.எஞ்சிய அருக்காணி மட்டும் பாசத்தால்
அண்ணமார்களின் உடலைக்காண படுகளம் வருகிறாள். படுகளம் வந்து உடலைக்கண்டபின் முத்தரைய போர் வீரர்களின் உதவியோடு
படுகளத்தில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். அருக்காணியும் துயரம் மிகுந்து, அழுது அழுது படுகளத்திலேயே இறந்து விடுகிறாள்.
அருக்காணியை வளநாட்டில் இருந்து அழைத்து வந்த முதல் உடல் அடக்கம் செய்தது வரை பொன்னர் சங்கர் குடும்பத்தினர் மீது
ஆழ்ந்த பற்றுவைத்திருந்த முத்தரையர்களே.
இந்த போரில் வாங்கிய வரத்தின் படி அண்ணன்தான் முதலில் இறந்த்தாக கதை சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ
சங்கர்தான் முதலில் இறப்பதாக உண்மையைச் சொல்லிவிட்டார்கள். பொன்னர்தான் முதலில் இறந்த்தைத்தான் வரத்தின்படி கதை
எழுதுவோர் சொல்லியிருக்கவேண்டும். பொன்னருக்குத்தான் முதலில் 16 வயது முடியும்.ஆனால் தம்பி சங்கர்தான் முதலில் இறப்பதாக
கூறியுள்ளனர்.
இதற்கிடையே பொன்னர் தன்னந்தனியே குதிரை ஏறி கொங்கு 24 நாட்டில் உள்ள வேட்டுவரை எல்லாம் வெட்டிக்கருவறுத்ததாகவும்,
வந்த பின் வாளில் விழுந்து தற்கொலை செய்ததாக கூறுகின்றனர். 24 வேட்டுவரை கருவறுத்த பின்னர் பொன்னர் ஏன் தற்கொலை
செய்துகொள்ளவேண்டும்.
18 நாட்டு வேட்டுவர் படையும் தலையூர் காளிதலைமையில் வீரப்பூரில் போரிட்டுக்கொண்டு இருக்கும்போது பொன்னர் எதற்காக கொங்கு
நாட்டிற்கு 140 கி.மீட்டர் மேற்கு நோக்கிச்செல்லவேண்டும். படைகளை எதிர்த்து வீரப்பூரில் போரிட்டு கருவறுத்து இருக்கலாமே. 500 வருடத்திற்கு முன்னாடி கள்ளழகர் அம்மானையும், பிச்சனும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதை எழுதியிருக்கிறார்கள்.இன்றைக்கு அவர்கள் இருந்திருந்தால் ஆஸ்கார் அவார்டே வாங்கியிருப்பார்கள்.
வளநாட்டு படைக்கும், தலையூர் காளி படைக்கும் போர் நடக்க என்ன காரணம் என்று கள்ளழகர் அம்மானையிலும் இல்லை. பிச்சன்
எழுதிய அண்ணமார் சாமி கதையிலும் தெளிவான காரணம் எதுவும் கூறப்படவில்லை.வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி
எல்லைச்சண்டையாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
கலைஞர் கருணாநிதியார் எழுதிய பொன்னர் சங்கரில் தலையூர்காளியை பொன்னர் வாளால் நெஞ்சில் தாக்கி கொல்லப்படுவதாக
எழுதியிருக்கிறார். இதில் சிறிதும் உண்மையில்லை.வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை.போரின் முடிவில் வென்றது தலையூர்காளிதான். இயற்கையான மரணம் வரும்வரை வாழ்ந்திருக்கிறார். தலையூர் காளி பரம்பரையினர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். கலைஞர் சிலரை திருப்த்தி படுத்துவதற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் இவ்வாறு எழுதியுள்ளார்.
தலையூரில் வேட்டுவக்கவுண்டர் திருவிழா
தலையூரில் அன்னை ப்பிரம்மாகாளி மாசித்திருவிழா 13.03.11 அன்று சிறப்பாக நடைபெற்றது.நமது வேட்டுவக்கவுண்டர் சமூக உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.நமது சங்கங்கள் பல இருந்தாலும் நமது சமூக ஒற்றுமைக்கு இக்கோவில் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டு.இதை பார்க்கும் போது நமக்கு சந்தோசமாக இருக்கிறது. ஒருவருக்கொறுவர் நலம் விசாரித்துக்கொள்வதும்,நீண்ட நாட்களாக சந்திக்காதஉறவுகளை சந்திக்க இத்திருவிழா ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
பல பகுதிகளில் இருந்து , நமது சமூகத்தினர் வந்து கலந்துகொண்டார்கள். இவ்விழாவில் அன்னதானம்,சிவன் பார்வதி நடனம் , காளிதேவி நடனங்களை நடன கலைஞர்கள் நடனமாடி விழாவிற்க்கு வந்திருந்தோரைமகிழ்வித்தனர். காலை முதல் மாலை வரை கிடாய் வெட்டு நடந்த்து. மற்றும் சிறப்பு வழிபாடுகள், யாக பூசையும் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை காளி சேனை அமைப்பு இன்முகத்துடன் வரவேற்றது.விழா ஏற்பாடுகளை காளிசேனை சிறப்பாக செய்திருந்தது. இவ்விழாவில் கோவை ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச் சங்கமும்,மற்ற நமது சமூக சங்கங்களும் அமைப்புகளும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.நமது சமூக ஒற்றுமை திருவிழா என்றால் மிகையாகாது.
Gallery
Labels
-
வீரப்பூர் போர்களத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும்,போரின் முடிவையும் படைவீரர்களாகப் பணியாற்றிய முத்தரைய வீரர்களே அறிவார்கள்.அவர்கள் தெ...
-
கொங்கு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர்கள் பேரவை ( அரசியல் சாரா சேவை சங்கம் ) - அறிமுகக்கூட்டம் நாள்: 02.01.2011 ஞாயற்றுக்கிழமை இடம்: அரச்சலூ...
-
தலையூரில் வேட்டுவக்கவுண்டர் திருவிழா தலையூரில் அன்னை ப்பிரம்மாகாளி மாசித்திருவிழா 13.03.11 அன்று சிறப்பாக நடைபெற்றது.நமது வேட்டுவக்கவுண்ட...
-
Vettuvar Malar-2011 JULY
-
கொங்கு நாட்டுச் சமுதாய வரலாற்றில் வேட்டுவர் முக்கியமானதோர் இடத்தை வகிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதலை தமது முதன்மைத் தொழிலாகக்கொண்டிருந்தன...
-
Subscribe to our mailing list
-
கொங்கு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் பேரவை கூட்டம். நாள் : 17.01. 2011 இடம் : பட்டையகாளிபாளையம் காலஹஸ்தீஸ்வரர் கோவில்மண்டபம். கொங்கு வேட்டுவ...