Latest News

தலையூரில் வேட்டுவக்கவுண்டர் திருவிழா

By கொங்கு வேந்தன் - Wednesday, March 16, 2011


தலையூரில் வேட்டுவக்கவுண்டர் திருவிழா

தலையூரில் அன்னை ப்பிரம்மாகாளி மாசித்திருவிழா 13.03.11 அன்று சிறப்பாக நடைபெற்றது.நமது வேட்டுவக்கவுண்டர் சமூக உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.நமது சங்கங்கள் பல இருந்தாலும் நமது சமூக ஒற்றுமைக்கு இக்கோவில் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டு.இதை பார்க்கும் போது நமக்கு சந்தோசமாக இருக்கிறது. ஒருவருக்கொறுவர் நலம் விசாரித்துக்கொள்வதும்,நீண்ட நாட்களாக சந்திக்காதஉறவுகளை சந்திக்க இத்திருவிழா ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

பல பகுதிகளில் இருந்து , நமது சமூகத்தினர் வந்து கலந்துகொண்டார்கள். இவ்விழாவில் அன்னதானம்,சிவன் பார்வதி நடனம் , காளிதேவி நடனங்களை நடன கலைஞர்கள் நடனமாடி விழாவிற்க்கு வந்திருந்தோரைமகிழ்வித்தனர். காலை முதல் மாலை வரை கிடாய் வெட்டு நடந்த்து. மற்றும் சிறப்பு வழிபாடுகள், யாக பூசையும் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை காளி சேனை அமைப்பு இன்முகத்துடன் வரவேற்றது.விழா ஏற்பாடுகளை காளிசேனை சிறப்பாக செய்திருந்தது. இவ்விழாவில் கோவை ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச் சங்கமும்,மற்ற நமது சமூக சங்கங்களும் அமைப்புகளும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.நமது சமூக ஒற்றுமை திருவிழா என்றால் மிகையாகாது.

Follow our blog on Twitter, become a fan on Facebook. Stay updated via RSS

Advertisement